17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் இதய தினவிழா..

தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் இதய தினவிழா..

எழுதியவர்: mohan September 30, 2021, 10:39 am

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ‘உலக இதய தினவிழா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை, ரோட்டரி கிளப் குற்றாலம் கிளையுடன் இணைந்து இதய பாதுகாப்பு விழிப்புணர்வும், கருத்தரங்கமும் நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு இணை இயக்குனர் நலப்பணிகள் மருத்துவர் வெங்கட்ரங்கன் தலைமை தாங்கினார். ரோட்டரி கிளப் குற்றாலம் கிளை தலைவர் பிரகாஷ், செயலாளர் கார்த்திக் குமார் கலந்து கொண்டனர்.ரோட்டரி கிளப் முன்னாள் கவர்னர் ராஜகோபாலன், ரோட்டரி கிளப் மற்றும் IMA தலைவர் மருத்துவர் அஜிஸ் ஆகியோர் கலந்து சிறப்புரை ஆற்றினார்கள். நிகழ்ச்சியில் தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு பல உதவிகளை வழங்கிய குற்றாலம் ரோட்டரி கிளப் தலைவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்கள்.மருத்துவர்கள் மல்லிகா, மருத்துவர் மாரிமுத்து, மருத்துவர் அகத்தியன் ஆகியோர் இதய பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு குறித்து விளக்கம் அளித்தனர். ரோட்டரி கிளப் மூலம் தானியங்கி ரத்த அழுத்த கருவி, தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இருதய நோயாளிகளுக்கு வழங்கப்பட்டது. யோகா நேச்சுரோபதி மூலம் கலந்து கொண்ட அனைவருக்கும் இதய பாதுகாப்பை உணர்த்தும் விதமாக, முளைக்கட்டிய வேர்க்கடலையும், நெல்லிக்காய் சாரும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் உலக இருதய நாள் உறுதி மொழி எற்கப்பட்டது. மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ஜெஸ்லின் விழாவில் கலந்து கொண்ட இணை இயக்குனர், ரோட்டரி கிளப் தலைவர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள், செவிலியர் பயிற்சி மாணவிகள், மருத்துவமனை பணியாளர்கள், பொதுமக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!