வேலூர் மாவட்டம் காட்பாடி ஊராட்சி ஒன்றியம் அதிமுகசார்பில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு
பிரம்மபுரத்தை சேர்ந்த கோமதி பிரகாசம் போட்டியிடுகிறார். ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குபதிவு வரும் 6-ம் தேதி நடைபெறுகிறது. தேர்தல் களம் இப்போது சூடுபிடித்துள்ளது. அதிமுகசார்பில் போட்டியிடும் கோமதி பிரகாசம் தனது கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொண்டார். கோமதிபிரகாசகத்திற்கு ஆதரவாக வேலூர் மாவட்ட மாநகர அதிமுக செயலாளர் எஸ்ஆர் கேஅப்பு, அவைத்தலைவர் எம்.ஆர்.ரெட்டி, அதிமுக பிரமுகர் பிரம்மபுரம் பிரகாசம் மற்றும் அதிமுகவினர் வாக்கு சேகரித்து வருகின்றனர். பிரம்மபுரம், சேவூர், கரிகிரி, கண்டிப்பேடு, சேர்க்காடு உள்ளிட்ட ஊராட்சி பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டனர்.
காட்பாடி மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக வேட்பாளர் தீவிர பிரச்சாரம்
எழுதியவர்: mohan September 29, 2021, 6:00 pm




You must be logged in to post a comment.