18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » விதியை மீறி பெட்ரோல் பல்க்-களில் பாட்டிலில் பெட்ரோல் விற்பனை.நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

விதியை மீறி பெட்ரோல் பல்க்-களில் பாட்டிலில் பெட்ரோல் விற்பனை.நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

எழுதியவர்: mohan September 28, 2021, 10:41 am

மதுரையில் கண்ணாடி உள்ளிட்ட பிளாஸ்டிக் பாட்டிலில் பெட்ரோல் நிரப்பி தீப்பற்ற வைத்து வீடுகளில் தூக்கி வீசுவது (பெட்ரோல் குண்டு வீச்சு) போன்ற அதிர்ச்சிஅளிக்கும் சம்பவங்கள் கீரைத்துறை, ஜெய்ஹிந்த்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது.இப்படி நடைபெறும் சம்வங்களுக்கு மூலகாரணமாக பெட்ரோல் பங்கில் பாட்டிலில் பெட்ரோல் விற்பனை செய்வதால் இது போன்ற குற்றச் சம்பவங்களை அரங்கேற்றி வருகின்றனர் ரவுடிகள்.இந்த நிலையில் மதுரை திருப்பரங்குன்றம் சாலையில் உள்ள பெட்ரோல் பல்க்கில் பாட்டிலில் பெட்ரோல் விற்பனை செய்யப்பட்டு வருவது காவல் துறையினர் நடவடிக்கை எடுப்பதுமில்லை., கண்டு கொள்வதுமில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.மாவட்டம் முழுவதும் காவல்துறை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இருக்கும் பெட்ரோல் பங்குகள் பாட்டிலில் பெட்ரோல் வழங்குவதை காவல்துறையினர் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!