மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக தனிப்படை பிரிவு போலிசாருக்கு
ரகசியத் தகவல் கிடைத்தது.இதனையடுத்து உசிலம்பட்டி நகர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் அருண் தலைமையில் ரோந்துப்பணியில் ஈடுபட்ட போது உசிலம்பட்டி தேனி ரோடு கவுசிங் போர்டு அருகே மூட்டையுடன சந்தேகத்திற்கிடமான நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை செய்ததில் அவர் மதுரை செல்லூரைச் சேர்ந்த பால்பாண்டி (43) என்பதும் விற்பனை செய்வதற்காக கஞ்சா கொண்டு வநததும் தெரிய வந்தது.மேலும் அவரிடமிருந்து 17 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.இது தொடர்பாக உசிலம்பட்டி நகர் காவல் நிலையப் போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
உசிலம்பட்டியில் விற்பனை செய்வதற்காக கொண்டு வரப்பட்ட 17 கிலோ கஞ்சா பறிமுதல் .ஒருவர் கைது.
எழுதியவர்: mohan September 27, 2021, 12:33 pm




You must be logged in to post a comment.