18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மேல்பென்னாத்தூர் கிராமத்தில் 3ம் கட்ட மாபெரும் தடுப்பூசி முகாம்.

மேல்பென்னாத்தூர் கிராமத்தில் 3ம் கட்ட மாபெரும் தடுப்பூசி முகாம்.

எழுதியவர்: mohan September 26, 2021, 2:05 pm

 திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்பெண்ணாத்தூர் ஊராட்சியில்  செங்கம் சட்ட மன்ற உறுப்பினர் மு.பெ.கிரி ஆலோசனையின் பேரில் ஊராட்சி மன்ற தலைவர் விஜய் தலைமையில் மூன்றாம் கட்ட மாபெரும் தடுப்பூசி முகாம் சிறப்பாக நடைபெற்றது.  மேல்பெண்ணாத்தூர் மருத்துவர் கிஷோர் முன்னிலையில் செவிலியர் கலைச்செல்வி, அங்கன்வாடி மைய பொறுப்பாளர் சிவகாமி, மஸ்தூர் முத்தமிழ் செல்வி , மற்றும் சுகாதாரத் துறையினர் வருவாய் துறையினர் தடுப்பூசி முகாமில் ஈடுபட்டனர் . கிராமப்புற மக்கள் தாமாக முன்வந்து தடுப்பு செலுத்தி கொண்டனர். முகாம் நடைபெறுவதையொட்டி முன்னரே வீடு வீடாக சென்று தடுப்பூசிகான டோக்கன் வழங்கினார். பின்னர் நிகழ்ச்சிகளில் பொது மக்கள் கூட்டமாக கூடுவது, முக கவசங்களை முறையாக அணியாதது போன்றவற்றால் தொற்று அதிகரிக்கிறது. காய்ச்சல் வந்த உடனேயே காலதாமதம் செய்யாமல் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.அடுத்த ஒரு மாதத்திற்குள் அனைவரும் தானாக முன்வந்து, முழுமையாக தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும். அதன்படி, ஞாயிற்றுக் கிழமை நடத்தப்படும் மெகா தடுப்பூசி முகாம்களை, மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்” என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார். முகாமில் பள்ளி ஆசிரியர்கள் வேல்முருகன் சங்கீதா தனலட்சுமி உடன் இருந்தனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!