17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்தியா அதிவேகமாக ஏழ்மையை ஒழித்து வருகிறது-முன்னாள் மத்திய அமைச்சர்பெருமிதம்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்தியா அதிவேகமாக ஏழ்மையை ஒழித்து வருகிறது-முன்னாள் மத்திய அமைச்சர்பெருமிதம்.

எழுதியவர்: mohan September 26, 2021, 2:02 pm

செங்கத்தில் நடைபெற்ற நரேந்திர மோடி பிறந்த நாள் விழாவில்பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்தியா அதிவேகமாக ஏழ்மையை ஒழித்து வருகிறதுஎன்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார்திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கரியமங்கலம் ஊராட்சியில் பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் 71வது பிறந்த நாளை முன்னிட்டு சேவை வாரமாக கொண்டாடினர். விழாவிற்கு மாவட்ட தலைவர் ஜீவானந்தம் தலைமை தாங்கினார் கரியமங்கலம் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி சீனிவாசன் ஒன்றிய தலைவர் முரளி நாதன் மாவட்ட பொதுச் செயலாளர் சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர் நிகழ்ச்சியின் முன்னதாக மாவட்ட பொதுச் செயலாளர் சேகர் அனைவரையும் வரவேற்று பேசினார் சிறப்பு விருந்தினராக முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் பின்னர் பேசியதாவது; நம்முடைய பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்தியா அதிவேகமாக ஏழ்மையை ஒழித்து வருகிறது. இதுகுறித்து சர்வதேச அமைப்புகள் குறிப்பிட்டுள்ளன. மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்ட, ஏழைகள் நலன் சார்ந்த பல திட்டங்களால் இது சாத்தியமாகியுள்ளது. மத்திய அரசால் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் பாகுபாடின்றி அனைவரும் பயன் பெற்று வருகின்றனர். நம் பாரத பிரதமர் நாட்டு மக்களுக்காக அவர் படித்துக் கொண்டிருக்கிறார் நாம் அதை உணர வேண்டும் மேலும் உள்ளாட்சி தேர்தல் கட்சி தொண்டர்கள் திறம்பட பணியாற்ற வேண்டும் என்று பேசினார். முன்னதாக கரியமங்கலம் மற்றும் தானகவுண்டபுதூர் கிராமத்தில் மரக்கன்றுகள் மற்றும் அன்னதான நிகழ்வு, கிராமப்புற ஏழை பெண்களுக்கு சேலை வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது நிகழ்வில்
கோட்ட அமைப்புச் செயலாளர் குணசேகரன் பொதுச் செயலாளர் சதீஷ் மாவட்ட செயலாளர் பானுமதி,மாவட்ட பொது செயலாளர்கள் ரமேஷ் ,சேகர் , சதீஷ் பட்டியல் அணி மாநில செயலாளர் ஜெயராமன் ஜ,ஓபிசி அணி மாவட்ட துணைத்தலைவர் ரமேஷ், கிழக்கு ஒன்றிய தலைவர் முரளி நாதன் , மேற்கு ஒன்றிய தலைவர் தாமோதரன் , செங்கம் நகர தலைவர் ராஜேந்திரன், மாவட்ட ஒன்றிய நகர கிளை கழக நிர்வாகிகள் தொண்டர்கள் ஊர் பொதுமக்கள் என கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் கலசபாக்கம் ஒன்றிய கவுன்சிலர மாவட்ட பொதுச் செயலாளருமான ரமேஷ் நன்றி கூறினார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!