18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » செங்கம் அருகே பல நூற்றாண்டை சேர்ந்த வீரனின் நடுகல் சிலை கண்டெடுப்பு.

செங்கம் அருகே பல நூற்றாண்டை சேர்ந்த வீரனின் நடுகல் சிலை கண்டெடுப்பு.

எழுதியவர்: mohan September 25, 2021, 11:43 am

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் செங்கம் அருகே வீரனின் சிலை அப்பகுதி மக்கள் கண்டெடுப்பு கிராம மக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர்.செங்கம் அடுத்த மேல்புழுதியூர் அருகிலுள்ள சந்தகவுண்ட புதூர் பகுதியில் உள்ள அடர்ந்த காட்டுப் பகுதியில் புடைப்புச் சிற்பம் கண்டெடுப்பு குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது;இந்த சிலை பல நூற்றாண்டின் பிற்பகுதி மற்றும் 18ம் நூற்றாண்டின் முற்பகுதியை சேர்ந்த வீரனின் நடுகல் சிலையாக இருக்கலாம் போரில் இறந்தவர்களின் நினைவாக நடுகல் நடப்படும். போர் வீரன், போர்ப்படை தளபதி, எதிரி நாட்டின் வீரர்களை கூடுதலாக அழித்து, மாண்டுபோன வீரன் என யாரின் நினைவாக நடுகல் நடப்படுகிறதோ, அதை குறிப்பிடும் குறியீடுகளுடன் நடுகல் நடப்படும். இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ள நடுகல் வீரன் சிலை அமைப்பு, கையில் வில் அம்பு ஏந்திய நிலையில் ஒரு கை வில் தண்டையும், மறு கை நாணில் அம்பேற்றிய நிலையிலும் உள்ளது.வீரனின் முதுகுப்பகுதியில் அம்புகள் வைக்கும் கூடையும் உள்ளது. இடுப்பிலிருந்து முழங்காலுக்கு ஆடையும், கையில் வீரக்கழலும், காதில் காதணியும் காணப்படுகிறது. தலை முடி கொண்டையாக கட்டப்பட்டுள்ளது. வீரனின் இடதுகால் அருகே சிறிய உருவம் ஒன்று காணப்படுகிறது. தலைமுடி கொண்டையிட்டு கைகள் கூப்பிய நிலையில் உள்ளன.இவைகளை பார்க்கும்போது பெரிய உருவம் படைத்தளபதியாகவும், சிறிய உருவம் படை வீரனாகவோ அல்லது மனைவியாகவோ இருக்க வாய்ப்புள்ளது. என்று தெரிவிக்கின்றனர் இச்சிலையை அரசு அருங்காட்சியகத்தில் வைத்து பாதுகாக்க வேண்டும். இப்பகுதியில் தொல்லியல் துறை சார்பில் ஆய்வு நடத்த வேண்டும். சமூக ஆர்வலரும் அப்பகுதி மக்களும் இவ்வாறு கோரிக்கை விடுத்தனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!