17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டியில் பருவமழையை முன்னிட்டு வடிகால் கால்வாய் தூர்வாரும் பணி துவங்கியது.

உசிலம்பட்டியில் பருவமழையை முன்னிட்டு வடிகால் கால்வாய் தூர்வாரும் பணி துவங்கியது.

எழுதியவர்: mohan September 25, 2021, 11:30 am

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராடசியில் 24 வார்டுகள் உள்ளன.இந்த வார்டுகளில் வடிகால்கள் அனைத்தையும் வரும் பருவமழை ஆரம்பிக்கும் முன்னரே பேரிடர்கள் ஏற்ப்படாத வகையில் தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகின்றது.இந்தப் பணியில் பெரிய சிறிய நடுத்தர கால்வாய்கள் என 3 விதமாக பிரிக்கப்பட்டு ஒரு நாளைக்கு 4 வார்டுகள் வீதம் தூர்வாரும் பணி நடைபெறும்.இதோ போல் 24 வார்டுகளிலும் தூர்வாரும் பணி நடைபெறும்.இன்று உசிலம்பட்டி அருகே கருக்கட்டாண்பட்டியில் வடிகால் கால்வாய் தூர்வாரும் பணியை உசிலம்பட்டி நகராட்சி ஆணையாளர் பாஸ்கரன் பார்வையிட்டார்.நகராட்சி பகுதிகளில் உள்ள கால்வாய்களை தூர்வாரும் பணி நகராட்சி ஆணையாளர் பாஸ்கரன் நகராட்சி பொறியாளர் முத்து சுகாதார ஆய்வாளர்கள் சரவண பிரபு, சசிகலா மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் தூய்மைப் பணியாளர்கள் கலந்து கொண்டு உசிலம்பட்டி நகராட்சி பகுதியில் உள்ள கால்வாய்களை மற்றும் சாக்கடைகளில் ஜேசிபி இயந்திரம் மூலம் தூர்வாரினர். மழைக் காலங்களில் கால்வாயில் நீர் தேங்காமல் இருப்பதற்கு முன்னேற்பாடாக சாக்கடைகள் கால்வாய்கள் ஊரணிகள் தூர்வாரும் பணியில் நகராட்சி நிர்வாகம் துரிதமாக பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும்பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

உசிலை சிந்தனியா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!