17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அசாமில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டை கண்டித்து எஸ்டிபிஐ கட்சி மதுரை வடக்கு மாவட்டம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

அசாமில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டை கண்டித்து எஸ்டிபிஐ கட்சி மதுரை வடக்கு மாவட்டம் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

எழுதியவர்: mohan September 24, 2021, 2:49 pm

அசாமில் நேற்று அசாம் காவல்துறையினரால் 4,500 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் முயற்சியில் விவசாயிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி அங்கிருந்த மக்களை வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்த முயற்சி செய்ததில் 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர் இந்த சம்பவங்களை கண்டித்து இன்று கோரிப்பாளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது..வடக்கு மாவட்ட தலைவர் பிலால் தின் தலைமை வகித்தார்.வடக்கு மாவட்ட செயலாளர் கமால் பாஷா வரவேற்புரை நிகழ்த்தினார்.வடக்கு மாவட்ட துணை தலைவர் ஜாபர் சுல்தான் துவக்க உரை நிகழ்த்தினார் நிகழ்த்தினார்.வடக்கு மாவட்ட தலைவர் பிலால் தீன், தெற்கு மாவட்ட தலைவர் சீமான் சிக்கந்தர், விமன் இந்தியா மூவ்மெண்ட் மதுரை மாவட்ட தலைவி கதீஜா பீவி,விடுதலை சிறுத்தைகள் கட்சிஇளைஞரணி மாநில துணைச்செயலாளர் மாலின்,ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்கள்      இறுதியாக வடக்கு மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுப்பிரமணியன் நன்றியுரை நிகழ்த்தினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!