17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் நேரடி கொள்முதல் நிலையத்தை அமைச்சர் மூர்த்திதுவக்கி வைத்தார்.

மதுரையில் நேரடி கொள்முதல் நிலையத்தை அமைச்சர் மூர்த்திதுவக்கி வைத்தார்.

எழுதியவர்: mohan September 24, 2021, 11:41 am

மதுரை கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அரும்பனூர் கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையத் துவக்க விழாவிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் அனீஷ் சேகர் தலைமை வகித்தார். சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன், மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி நேரடி கொள்முதல் நிலையத்தை துவக்கி வைத்தார். மேலும் கருணை அடிப்படையில் விற்பனையாளர் பணிக்கான பணிநியமன ஆணையை வழங்கினார்.தொடர்ந்து மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் பெறுவதற்கான ஆணையை வழங்கினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!