17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கோவில் அருகே செயல்படும் மதுக்கடையை அகற்றக் கோரி பாமக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவில் அருகே செயல்படும் மதுக்கடையை அகற்றக் கோரி பாமக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

எழுதியவர்: mohan September 20, 2021, 2:03 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ளது கோவிலாங்குளம் கிராமம்.இக்கிராம விலக்கிலும் கிராமத்திலுள்ள விருமாண்டி கோவில் அருகிலும் இரு மதுபானக்கடைகள் செயல்பட்டு வருகின்றன.இந்த மதுபானக்கடையால் விருமாண்டி கோவிலுக்குச் செல்லும் பக்தர்கள் பெண்கள் குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்படுவதாகவும்;;;; மேலும் கோவிலாங்குளம் கிராம விலக்கில் செயல்படும் மதுபானக்கடையால் விபத்துக்கள் அதிகம் ஏற்ப்படுவதாகவும் கூறப்படுகிறது.இது குறித்து கிராம மக்கள் பலமுறை சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனுக் கொடுத்தும் எவ்வித பதிலும் இல்லை. இந்நிலையில் இந்த மதுபானக்கடைகளை அகற்றக் கோரி பாமக சார்பில் கருமாத்தூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மாவட்டத் தலைவர் முருகன் தலைமையில நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மதுக்கடைகளை அகற்றக் கோரி கோஷங்கள் எழுப்பட்டன.

உசிலை சிந்தனியா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!