17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை அருகே மின்மாற்றிகளை அமைச்சர் தொடங்கி வைப்பு.

மதுரை அருகே மின்மாற்றிகளை அமைச்சர் தொடங்கி வைப்பு.

எழுதியவர்: mohan September 20, 2021, 1:54 pm

மதுரை மாவட்டம்கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 5- கிராமங்களில்தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், மதுரை மின்பகிர்மான வட்டம் (ஊரகம்) சார்பில் ரூ.32.31 இலட்சம் மதிப்பீட்டில் புதிய மின்மாற்றிகளை, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்பி.மூர்த்தி துவக்கி வைத்தார்.மதுரை மாவட்டம், கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 5 கிராமங்களில்,தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், மதுரை மின்பகிர்மான வட்டம் (ஊரகம்) சார்பில் ரூ.32.31 இலட்சம் மதிப்பீட்டில் புதிய மின்மாற்றிகளை, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்பி.மூர்த்தி,துவக்கி வைத்தார்.தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், மதுரை மின்பகிர்மான வட்டம் (ஊரகம்) சார்பில், கொடிமங்கலம் கிராமத்தில் ரூ.7.8 லட்சம் மதிப்பீட்டில் 210 குடியிருப்பு மின்இணைப்புகள் பயன்பெறும் வகையில், அமைக்கப்பட்டுள்ள 100 கே.வி.ஏ.விநியோக மின்மாற்றியையும், ஆலாத்தூர் கிராமம் என்.எம்.எஸ் நகரில் ரூ.7.9 லட்சம் மதிப்பீட்டில் 140 குடியிருப்பு மின்இணைப்புகள் பயன்பெறும் வகையில், அமைக்கப்பட்டுள்ள 100 கே.வி.ஏ. விநியோக மின் மாற்றியையும், தவிட்டாம்பட்டி கிராமத்தில் ரூ.4.53 லட்சம் மதிப்பீட்டில், 160 குடியிருப்பு மின்இணைப்புகள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ள 100 கே.வி.ஏ. விநியோக மின்மாற்றியையும், முசுண்டகிரிபட்டி கிராமத்தில் ரூ.6.62 லட்சம் மதிப்பீட்டில் 190 குடியிருப்பு மின்இணைப்புகள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ள 100 கே.வி.ஏ. விநியோக மின்மாற்றியையும், இளமனூர் கிராமத்தில் ரூ.5.46 லட்சம் மதிப்பீட்டில் 255 குடியிருப்பு மின்இணைப்புகள் பயன்பெறும் வகையில் அமைக்கப்பட்டுள்ள 100 கே.வி.ஏ. விநியோக மின்மாற்றியையும், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு துவக்கி வதை்தார்.இந் நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர்ஆ.வெங்கடேசன், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர்சூர்யகலா, உதவி இயக்குநர் (உராட்சிகள்)பி.செல்லதுரை,எஸ்.வெண்ணிலா, தலைமை பொறியாளர்,.எஸ்.மங்கள நாதன், மேற்பார்வை பொறியாளர்ராஜா காந்தி, செயற் பொறியாளர்,ஆறுமுகராஜ், செயற் பொறியாளர்கிழக்கு வட்டாட்சியர்பாண்டி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!