17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திருப்பரங்குன்றம் பகுதியில் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்களுக்கு இலவச தொழிற் பயிற்சி முகாம் .

திருப்பரங்குன்றம் பகுதியில் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டவர்களுக்கு இலவச தொழிற் பயிற்சி முகாம் .

எழுதியவர்: mohan September 20, 2021, 5:03 am

மதுரை திருப்பரங்குன்றம் தாலுகாவுக்கு உட்பட்ட வலையங்குளம் பகுதியில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின்-ன் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவுக்கு உட்பட்ட வலையன்குளம் பகுதியில் சிறப்பு கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.மேலும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பொதுமக்கள் அனைவருக்கும் இலவசமாக உணவு வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து MSME என்கிற அமைப்பின் மூலம் தடுப்பூசி செலுத்திக்கொண்ட பெண்கள் அனைவருக்கும் சிறப்பு தொழிற் பயிற்சி முகாம் நடைபெற்றது. காலையில் இருந்து தற்போது வரை 500க்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்வத்துடன் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டு சிறப்பு பயிற்சி முகாமில் பங்கேற்றனர். தடுப்பூசி எடுத்துக்கொள்வதை ஊக்குவிக்கும் விதமாக இலவச உணவு மற்றும் தொழிற்பயிற்சி முகாம் நடத்திய திமுகவினர் மற்றும் MSME அமைப்பினரின் முயற்சிக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. வம்சம் இந்த தடுப்பூசி முகாம்500 மேற்பட்ட பொதுமக்கள் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!