18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கணவனுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற வயதான பெண்ணிடம் நகை பறித்து சென்றவர்களை போலிசார் தேடி வருகின்றனர்.

கணவனுடன் இருசக்கர வாகனத்தில் சென்ற வயதான பெண்ணிடம் நகை பறித்து சென்றவர்களை போலிசார் தேடி வருகின்றனர்.

எழுதியவர்: mohan September 19, 2021, 4:28 pm

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே ஆவாரம் பட்டியைச் சேர்ந்தவர் குண்டுமழை(63),இவருடைய மனைவி பாப்பு (62).இவர்;கள் உசிலம்பட்டி அருகே ஒரு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கிராமத்திலிருந்து இருசக்கர வாகனத்தில் உசிலம்பட்டிக்கு வந்துள்ளனர்.உத்தப்பநாயக்கனூர் அருகே மகாலிங்கபுரம் விலக்கு அருகே வரும் பொழுது இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் டிவிஎஸ் எக்ஸ் பைக்கில் பின்புறம் அமர்ந்திருந்த பாப்புவின் கழுத்திலிருந்த 2 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்றார்.நிலை தடுமாறி கீழே விழுந்த தம்பதியினர் பின் எழுந்து இது குறித்து உத்தப்பநாயக்கனூர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தனர்.போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

உசிலை சிந்தனியா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!