18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » அலங்காநல்லூர் அருகே ஆட்டோ கவிழ்ந்து ஒருவர் பலி, மற்றொருவர் படுகாயம்.

அலங்காநல்லூர் அருகே ஆட்டோ கவிழ்ந்து ஒருவர் பலி, மற்றொருவர் படுகாயம்.

எழுதியவர்: mohan September 19, 2021, 5:59 am

மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே ஆட்டோ நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்ததில், ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.அலங்காநல்லூர் வாவிடமருதூரைச் சேர்ந்தவர் ஹரிஹரன் மகன் தென்னவன் என்ற திணேஷ் வயது. 19. இவரும் அவரது நண்பர்களும், ஆட்டோவில், கல்லணையிலிருந்து- வாவிடமருதூருக்கு ஆட்டோவில் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது வளைவில் ஆட்டோ திரும்பும்போது, நிலை தடுமாறி தலைகுப்புற கவிழ்ந்ததில், ஆட்டோவில் பயணம் செய்த திணேஷ், பலத்த காயமடைந்து, சம்பவ இடத்திலேயே பலியானார்.மேலும், விக்னேஷ் காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.இது குறித்து, அலங்காநல்லூர் காவல் நிலையத்தினர் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!