18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » புரட்டாசி முதல் சனிக்கிழமைகோவில்கள் முன் திரண்ட பக்தர்கள்.

புரட்டாசி முதல் சனிக்கிழமைகோவில்கள் முன் திரண்ட பக்தர்கள்.

எழுதியவர்: mohan September 18, 2021, 10:12 am

புரட்டாசி சனிக்கிழமையான இன்று கோவில்கள் முன் நின்று பக்தர்கள் சாமி கும்பிட்டனர்.புரட்டாசி சனிக்கிழமைகள் பெருமாளுக்கு உகந்ததாக கருதப்படுகிறது. தற்போது கொரோனா அச்சத்தால் கோவில்கள் அனைத்தும் நடை சாத்தப்பட்டுள்ளது. இதனால் மதுரை அருள்மிகு கூடலழகா் திருக்கோயிலில் புரட்டாசி முதல் சனிவாரத்தை முன்னிட்டு பக்தர்கள் வெளியில் இருந்து சூடம் ஏற்றி தரிசனம் செய்தனர். இதேபோல தல்லாகுளம் பெருமாள் கோவில், மேலமாசி வீதி மதனகோபாலசாமி கோவில், உள்ளிட்ட பெருமாள் கோவில் முன்புறம் நின்று ஏராளமான பக்தர்கள் சூடம் ஏற்றியும், நெய் விளக்கு ஏற்றியும் சாமி கும்பிட்டு விட்டு சென்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!