18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ரூ.2 லட்சம் மதிப்பில் குட்கா பதுக்கிய இருவர் கைது;தென்காசி மாவட்ட காவல்துறை அதிரடி..

ரூ.2 லட்சம் மதிப்பில் குட்கா பதுக்கிய இருவர் கைது;தென்காசி மாவட்ட காவல்துறை அதிரடி..

எழுதியவர்: mohan September 18, 2021, 6:25 am

தென்காசி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் விற்பனையை தடுக்கும் வகையில் மாவட்டம் முழுவதும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்த இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் சட்டவிரோதமாக மது பாட்டில்கள்,போதை பொருட்கள் மற்றும் புகையிலை பொருட்களை விற்பனை செய்வதை தடுக்கும் பொருட்டு காவல் துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் KV நல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முத்து ரெட்டியப்பட்டியில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருப்பதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சார்பு ஆய்வாளர் ராஜகோபால் தலைமையிலான காவல் துறையினர் முத்து ரெட்டியப்பட்டியை சேர்ந்த பெருமாள்சாமி (51) என்பவரின் வீட்டில் விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த ரூபாய் 1,80,450 மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு இது குறித்து பெருமாள்சாமி(61) சுப்புராஜ்(45) குருநாதன்(60) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து பெருமாள் சாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அதே பகுதியைச் சேர்ந்த சுப்புராஜ் என்பவரின் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூபாய் 22,644 மதிப்பிலான குட்கா பொருட்களை சார்பு ஆய்வாளர் சங்கரநாராயணன் தலைமையிலான காவல் துறையினர் கைப்பற்றி சுப்புராஜ்(42), குருநாதன்(60) ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து சுப்புராஜை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!