17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆசிரியர்கள் மாணவர்கள் கோரிக்கை ஏற்று பேருந்தை துவங்கி வைத்த பாராளுமன்ற உறுப்பினர்.

ஆசிரியர்கள் மாணவர்கள் கோரிக்கை ஏற்று பேருந்தை துவங்கி வைத்த பாராளுமன்ற உறுப்பினர்.

எழுதியவர்: mohan September 16, 2021, 6:16 am

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள சிவலிங்கபுரம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது இந்த கிராமத்தில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு பாடம் எடுப்பதற்காக இராஜபாளையம் மற்றும் சுற்று கிராம பகுதிகளில் இருந்து ஆசிரியர்கள் சென்று வருகின்றனர் அதேபோல் அருகே உள்ள கிராமத்து பகுதியில் இருந்தும் மாணவர்கள் பள்ளிக்கு சென்று வருகின்றனர் ஆகையால் காலை 8 .45 மணிக்கு பேருந்து இருப்பதால் சரியான நேரத்திற்கு பள்ளிக்கு செல்ல முடியவில்லை என மாணவர்கள் பொதுமக்கள் மற்றும் ஆசிரியர் குற்றச்சாட்டு வைத்தனர் இதை அடுத்து இராஜபாளையம் சட்டமன்ற உறுப்பினர் தங்கபாண்டியன் தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் தனுஷ் எம் குமார் ஆகியோர் ஆசிரியர் மற்றும் மாணவர்கள் கோரிக்கையை ஏற்று 8:15 ராஜபாளையம் பழைய பேருந்து நிலையத்திலிருந்து சிவலிங்கபுரம் செல்வதற்கு மற்றும் தேவதானத்தில் இருந்து காலை 6 மணிக்கு சாஸ்தா கோவில் செல்வதற்கும் பேருந்துகளை இயங்க ராஜபாளையம் போக்குவரத்து கழக மேலாளர் இடம் எடுத்துரைத்து அதனடிப்படையில் இன்று புதிய நேரத்தில் கூடுதலாக பேருந்துகளை துவங்கி வைத்தனர் வைத்தனர் .கூடுதல் பேருந்து இயக்குவதால் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் உதவியாக இருப்பதால் ஆசிரியர் மாணவர்கள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினருக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டனர்..

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!