17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை கோட்ட சரக்கு போக்குவரத்து வருமானம் 100 கோடியை தாண்டியது.

மதுரை கோட்ட சரக்கு போக்குவரத்து வருமானம் 100 கோடியை தாண்டியது.

எழுதியவர்: mohan September 15, 2021, 5:18 am

மதுரை கோட்டத்தில் தூத்துக்குடி, திண்டுக்கல், வாடிப்பட்டி, மானாமதுரை போன்ற ரயில் நிலையங்களில் இருந்து சரக்கு ரயில் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. தூத்துக்குடியில் இருந்து ரசாயன உரம், நிலக்கரி, வாடிப்பட்டியில் இருந்து டிராக்டர்கள் மானாமதுரையிலிருந்து மரக்கரி ஆகியவை அனுப்பப்படுகிறது. இதன் மூலம் சரக்கு போக்குவரத்து வருமானம் கடந்த ஐந்து மாதங்களில் ரூபாய் 100.5 கோடியை எட்டியுள்ளது. 324 சரக்கு ரயில் பெட்டி தொடர்கள் மூலம் ஒன்பது லட்சம் டன் சரக்குகள் கடந்த ஐந்து மாதங்களில் ரயில் மூலம் அனுப்பப்பட்டுள்ளது. கடந்தாண்டு 37 ரயில் பெட்டி தொடர்கள் மூலம் நிலக்கரி அனுப்பியதால் கிடைத்த வருமானம் 12 கோடி. அது இந்தாண்டு 73 ரயில் பெட்டி தொடர்கள் மூலம் நிலக்கரி அனுப்பியதில் வருமானம் ரூபாய் 24 கோடியாக உயர்ந்துள்ளது. அதேபோல டிராக்டர்கள் அனுப்பியதில் கடந்த ஆண்டு வருமானம் ரூபாய் 5.4 கோடி. அது இந்தாண்டு ரூபாய் 6.4 கோடியாக உயர்ந்துள்ளது. மேலும் சரக்கு போக்குவரத்து வருமானத்தை அதிகரிக்க மதுரை கோட்டை வர்த்தக வளர்ச்சி குழு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது தொடர் முயற்சியின் வாயிலாக ஒரு *புதிய சரக்கு போக்குவரத்து மதுரை கோட்டத்திற்கு கிடைத்துள்ளது. தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூர் அருகே உள்ள ராஜ்-நந்தகான் என்ற ரயில் நிலையத்திற்கு புண்ணாக்கு மூடைகள் ரயில் மூலம் செவ்வாயன்று அனுப்பப்படுகிறது. இதன் மூலம் ரூபாய் 32.5 லட்சம் வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!