17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை ரயில் நிலையத்தில் 21மணி நேர கார் பார்க்கிங்கிற்கு 500 ரூபாய் கட்டணம் .

மதுரை ரயில் நிலையத்தில் 21மணி நேர கார் பார்க்கிங்கிற்கு 500 ரூபாய் கட்டணம் .

எழுதியவர்: mohan September 15, 2021, 5:14 am

மதுரை ரயில்வே நிலையத்தில் கார் பார்க்கிங்கில் 21மணி நேரத்திற்கு கார் பார்க்கிங் கட்டணம் 500ரூபாய் வசூலிக்கப்பட்டது. வாகன ஓட்டிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.முதல் 3மணி நேரத்திற்கு 30ரூபாயும், அடுத்த 3மணி நேரத்திற்கு 50ரூபாயும், அடுத்த ஒவ்வொரு மணி நேரத்திற்கு 70ரூபாய் என கட்டணம் வசூலிப்புபெரும்பாலான ரயில் பயணிகள் காரை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு ரயிலில் பயணிப்பது இல்லை. உறவினர்களை ரயில் வந்து இறக்கி விட்டு செல்வார்கள். அல்லது வீட்டிற்கு அழைத்து செல்வார்கள் ஆகவேரயில்நிலைய பார்க்கிங்கில் தேவையின்றி வாகனங்கள் நிறுவத்துவதால் ஏற்படும் நெரிசலை கட்டுப்படுத்த இது போன்ற நடைமுறை அமல் படுத்தப்படுகிற என்றும்,ரயில் நிலையத்தை சுற்றியுள்ள வணிகர்கள் வாகனங்களை இந்த ரயில் நிலையத்தில் கொண்டுவந்து நிறுத்துவதால் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.இதை கட்டுப்படுத்துவதற்காகவே இந்த நடைமுறை அமல் படுத்தப் பட்டிருக்கிறது எனரயில்வே நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!