17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் நடிகர் சூரி இல்ல திருமண விழாவில் மணமகள் அறையில் புகுந்து நகை திருட்டு.

மதுரையில் நடிகர் சூரி இல்ல திருமண விழாவில் மணமகள் அறையில் புகுந்து நகை திருட்டு.

எழுதியவர்: mohan September 14, 2021, 5:15 am

மதுரையில் திருமண மண்டப மணமகள் அறையில் புகுந்து நகை திருடிய ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். மதுரையை சேர்ந்தவர் நடிகர் சூரி. இவர் சினிமாவில் காமெடி நடிகராக இருந்து வருகிறார்.இவரது வீட்டு திருமணம் சிந்தாமணி பைபாஸ் ரோட்டில் உள்ள திருமணமண்டபத்தில் நடந்தது. அப்போது திருமணத்திற்கு. வந்த மர்ம நபர் ஒருவர் மணமகள் அறையில்புகுந்து ஒன்பதரை பவுன் நகைகளான கவர்னர்மாலை, நெக்லஸ் முதலியவைகளை திருடிச்சென்றுவிட்டார். இந்த திருட்டு தொடர்பாக சூர்யபிரகாஷ், கீரைத்துரை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை திருடிய மர்ம ஆசாமியை தேடி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!