தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை பணியாளர்கள் சங்கத்தின் வேலூர் மாவட்ட செயற்குழு கூட்டம் சத்துவாச்சாரி வள்ளலார் சங்க அலுவலகத்தில் நடந்தது.மாவட்ட கவுரவத் தலைவர் தாண்டவ மூர்த்தி தலைமை தாங்கினார். பேருராட்சிகளில் பணிபுரியும் தினக்கூலி பணியாளர்கள், திடக்கழிவு பணியாளர்கள் மற்றும் அரசு தோட்டக்கலைப்பண்ணைகளில் பணிபுரியும் தினக்கூலி பணியாளர்களை நிரந்தரம் செய்ய வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டத்தில் உள்ள ஜிபிஎப்-ஐ பிடித்தம் செய்ய வேண்டும உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்ட செயலாளர் பாலாஜிசிங், பொருளாளர் மணி, துணைத்தலைவர் ஜெயபால், பாலகிருஷ்ணன், அமுதா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ஏற்பாட்டை மாநிலகவுரவத் தலைவர் சி.ராஜவேலு செய்து இருந்தார்.
தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க வேலூர் மாவட்ட செயற்குழு கூட்டம் .
எழுதியவர்: mohan September 13, 2021, 10:58 am




You must be logged in to post a comment.