17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கடையநல்லூரில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்.

கடையநல்லூரில் மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்.

எழுதியவர்: mohan September 13, 2021, 6:56 am

தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் தென்றல் இக்ராம் மாற்றுத்திறனாளிகள் நல சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி தனியார் பள்ளிக் கூடத்தில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக தென்காசி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இளவரசி, தென்காசி மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் மாரியம்மாள், தமிழ்நாடு அனைத்து அரசுப் பணி மாற்றுத் திறனாளிகள் முன்னேற்றச் சங்க மாநிலத்தலைவர் அல்லாபிச்சை, தமிழ்நாடு அனைத்து அரசுப் பணி மாற்றுத்திறனாளிகள் முன்னேற்றச் நலசங்க கௌரவத் தலைவர் காதர் ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சிக்கு தென்றல் இக்ராம் மாற்றுத்திறனாளிகள் நல சங்க தலைவர் சேக் உதுமான் தலைமை தாங்கினார். செய்யது முகைதீன், மக்தூம், ஹபீப் ரஹ்மான், ஜபருல்லாகான் , செய்யது இப்ராஹிம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியினை நல்லாசிரியர் ரசூல் அஹமத் இப்ரஹிம் தொகுத்து வழங்கினார். காஜா மைதீன் அனைவரையும் வரவேற்றார். செய்யது மசூதுஅறிமுக உரையாற்றினார். வரலாற்று நூல் ஆசிரியர் இப்ராஹிம், அரஃபா வஹாப் , செய்யது இப்ராஹிம், மைதீன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். மாற்றுத்திறனாளிகள் நல சங்க நிர்வாகிகள் முகம்மதுஷா, இலியாஸ், பெனாசிர், சாகுல்ஹமீது ஆகியோர் கலந்து கொண்டனர். இறுதியில் பொருளாளர் செய்யது சுலைமான் நன்றி உரையாற்றினார். நிகழ்ச்சியில் ஏராளமான மாற்றுத்திறனாளிகள் கலந்து நலத்திட்ட உதவிகளை பெற்று சென்றனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!