18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஏடிஎம்மில் கொள்ளை அடிக்க முயன்று இயந்திரத்தை உடைக்க முடியாததால் ஏமாற்றத்துடன் திரும்பிய இளைஞர்

ஏடிஎம்மில் கொள்ளை அடிக்க முயன்று இயந்திரத்தை உடைக்க முடியாததால் ஏமாற்றத்துடன் திரும்பிய இளைஞர்

எழுதியவர்: mohan September 10, 2021, 6:51 pm

பெத்தானியாபுரம் பகுதியில் அமைந்துள்ள அரசுடமையாக்கப்பட்ட வங்கி ஏடிஎம் ஒன்று செயல்பட்டு வருகிறது இதில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக வங்கி நிர்வாகத்திற்கு தகவல் வந்தது சம்பவ இடத்திற்கு வந்த வங்கி அதிகாரிகள் ஏடிஎம் இயந்திரத்தை பார்க்கும்போது ஏடிஎம் இயந்திரம் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக கண்காணிப்பு கேமராவை ஆராய்ந்த பொழுது அப்பொழுது ஒரு இளைஞர் ஏடிஎம் எந்திரத்தை உடைப்பதும் கண்காணிப்பு கேமராவில் சாயம் பூசி மறைப்பதையும் போன்ற செயல்களில் ஈடுபட்டு இருப்பது பதிவாகியுள்ளது. இதுகுறித்து வங்கி நிர்வாகம் போலீசாருக்கு தகவல் கொடுத்து மற்றும் சிசிடிவி காட்சி களையும் கொடுத்தனர் .சிசிடிவி காட்சி ஆராய்ந்தபோது ஒரு இளைஞர் எந்திரத்தை உடைப்பதும் பணம் எடுக்கும் முயற்சி தோல்வி அடைந்ததும் தெரியவந்தது சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கொள்ளையடிக்க முயன்ற இளைஞரை தீவிரமாக தேடி வருகின்றனர்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!