18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொடைரோடுசுங்கச்சாவடியில் காவல்துறையினரின் அதிரடி சோதனையில் சுமார் 200 கிலோ குட்கா மற்றும் 13.5 கிலோ வெள்ளி கொலுசுகள் பறிமுதல் .

கொடைரோடுசுங்கச்சாவடியில் காவல்துறையினரின் அதிரடி சோதனையில் சுமார் 200 கிலோ குட்கா மற்றும் 13.5 கிலோ வெள்ளி கொலுசுகள் பறிமுதல் .

எழுதியவர்: mohan September 10, 2021, 10:37 am

திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல்-மதுரை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கொடைரோடு சுங்கச்சாவடியில் இன்று அதிகாலை முதல் அம்மையநாயக்கனூர் காவல்துறை ஆய்வாளர் சண்முகலெட்சுமி மற்றும் நிலக்கோட்டை காவல்துறை கண்காணிப்பாளர் முருகன் நெடுஞ்சாலை ரோந்து காவல்துறையினர் இணைந்து நடத்திய அதிரடி வாகன சோதனையில் சேலமாவட்டம் தருமபுரியிலிருந்து மதுரைக்கு செல்லும் அரசு பேருந்தில் முருகன் என்பவர் விற்பனைக்காக பதுக்கி கடத்தி வரப்பட்ட சுமார் 200 கிலோ குட்கா போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் முருகனை கைது செய்த அம்மையநாயக்கனூர் காவல்துறையினர் நிலக்கோட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தி சிறையில் அடைத்தனர்.மேலும் அதேபோல சேலத்தில் இருந்து மதுரைக்கு செல்லும் மற்றொரு அரசு பேருந்தில் ஆந்திராவைச் சேர்ந்த மோகன் என்பவர் பதுக்கி கடத்தி விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட சுமார் 13.5 கிலோகிராம் எடையுள்ள வெள்ளிக்கொலுசு, வளையல்கள் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து விசாரணை செய்த காவல்துறையினர் திண்டுக்கல் மதுரை மண்டல வணிகவரி துறை அலுவலர்களிடம் ஒப்படைத்தனர். இந்த வாகன சோதனையில் அம்மையநாயக்கனூர் காவல் துணை ஆய்வாளர் விஜய்பாண்டியன் அமுல்ராஜ் காவலர்கள் முருகன், பிரபு மற்றும் நெடுஞ்சாலை ரோந்து காவல்துறையினர் ஈடுபட்டனர்திண்டுக்கல் மதுரை தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடி பகுதியில் அதிகாலை முதல் பகல் முழுவதும் காவல்துறையினர் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டு குட்கா போதைப்பொருள் வெள்ளி பொருட்கள் கைப்பற்றப்பட்டது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!