18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சி.கெங்கம்பட்டு கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ செல்வ மகாகணபதி ஆலய மகா கும்பாபிஷேக திருவிழா

சி.கெங்கம்பட்டு கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ செல்வ மகாகணபதி ஆலய மகா கும்பாபிஷேக திருவிழா

எழுதியவர்: mohan September 10, 2021, 10:08 am

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டம் சி.கெங்கம்பட்டு கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ செல்வ மகா கணபதி ஆலய கும்பாபிஷேக திருவிழா ஊர் பொதுமக்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் வெகு விமர்சையாக நடந்தது.இதையொட்டி, காலை 9 மணிக்கு கணபதி ஹோமம், ப்ராயசித்த அஸ்தரஹோம ம், விசேஷ திரவிய ஹோமம் ஆகியவை நடைபெற்றன. தொடர்ந்து கோயில் கோபுர கலசத்துக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் வெகு விமர்சியாக நடந் தது. இதில், காஞ்சி மற்றும் சி.கெங்கம்பட்டு சுற்றியுள்ள அனைத்து கிராமப்புற பொதுமக்கள் பக்தர்கள் ஏராளமானோர் கோபுர தரிசனம் செய்தனர்.பின்னர் விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடைபெற்றது.முடிவில் பக்தர் களுக்கு தீர்த்தப் பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.விநாயகருக்கு சிறப்பு அபிஷேகமும், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் மற்றும் நவக்கிரக மூர்த்திகளுக்கும் காலை 5 மணியளவில் சிறப்பு அபிஷேகம், காலை 7 மணிக்கு சிறப்பு அலங்காரம், அர்ச்சனை மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதற்கான ஏற் பாடுகளை ஊராட்சி மன்ற தலைவர் உதய சேகரன் ஒன்றிய துணைத்தலைவர் சசிகலா உதய சேகரன் காமராஜர் அறக்கட்டளை நிறுவனர் ஏழுமலை, ஊராட்சி மன்ற துணை தலைவர் பாலமுருகன் வார்டு உறுப்பினர் அருள் சார் விழாக் குழுவினர் ராமமூர்த்தி, சுரேஷ் ,ராமு, சின்னமணி, குப்பன், கிராம நிர்வாக அலுவலர் திரு மலை ஊராட்சி எழுத்தர் செந்தில்குமார், சமூக ஆர்வலர் நாகராஜ் , ஊர் பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!