17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » நிகழ்வுகள் » போட்டோ கேலரி » இராமநாதபுர மாவட்ட வருவாய் துறை அலுவலர்கள் வேலை நிறுத்தம்.. பேச்சு வார்த்தையில் சுமூகம்…

இராமநாதபுர மாவட்ட வருவாய் துறை அலுவலர்கள் வேலை நிறுத்தம்.. பேச்சு வார்த்தையில் சுமூகம்…

எழுதியவர்: ஆசிரியர் January 4, 2018, 8:57 pm

நேற்று (03-01-2018) கீழக்கரையில் காவல்துறை அதிகாரி வெள்ளித்துரையின் போக்கை கண்டித்து வருவாய்த்துறை அலுவலர்கள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர், அதை தொடர்ந்து தொடர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் அறிவித்து இருந்தனர்.

இந்நிலையில் மக்கள் நலன் கருதி மாவட்ட ஆட்சித்தலைவர் (பொறுப்பு) மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் சம்பந்தப்பட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் வெள்ளதுரை ஆகியோர் உடன் இன்று (04-01-18) மதியம் பேச்சுவார்ரத்தை நடந்தது.

பின்னர் அப்பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு ஏற்பட்டதின் அடிப்படையில் அனைத்து இயக்க நடவடிக்கைகளும் திரும்ப பெற்றதோடு, இதில் உறுதுணையாக இருந்த பிற அலுவலர்கள் மற்றும் அனைத்து பத்திரிக்கையாளர்களுக்கும் நன்றி தெரிவித்து ராமநாதபுர மாவட்ட வருவாய் அலுவலர் சங்க செயலாளர் கே எம் தமிம்ராஜா அறிக்கை வெளியிட்டுள்ளார்.,

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!