17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை மாற்றி பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த கோரி ஆர்ப்பாட்டம்.

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை மாற்றி பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த கோரி ஆர்ப்பாட்டம்.

எழுதியவர்: mohan September 7, 2021, 1:24 pm

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் தொடர்பாக நிதியமைச்சர் தெரிவித்த கருத்தினை கண்டித்தும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அரசு ஊழியர்களுக்கு அமல்படுத்த வலியுறுத்தியும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்குமாவட்டஒருங்கிணைப்பாளர்கள் ஆசிரியர் சரவணன் மற்றும் பிரேமா ஆனந்தி இருவரும் கூட்டாக தலைமை ஏற்றனர். மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜா ராஜேஸ்வரன் கோரிக்கை விளக்க உரையாற்றினார்.தோழமை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் சோ.நடராஜன், சோலையன், மாரியப்பன், மனோகரன் ஆசிரியர் . காளிராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.ஆர்ப்பாட்டத்தில் 20 பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் திரளாக பங்கேற்றனர்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!