17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தமிழர்களின் தொன்மை நாகரிகத்தைப் பறை சாற்ற அடுத்த கட்டமாக அகழாய்வு நடத்துவதற்கு 3 இடங்களை தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளோம் தொல்லியல் துறை அமைச்சர் பேட்டி.

தமிழர்களின் தொன்மை நாகரிகத்தைப் பறை சாற்ற அடுத்த கட்டமாக அகழாய்வு நடத்துவதற்கு 3 இடங்களை தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளோம் தொல்லியல் துறை அமைச்சர் பேட்டி.

எழுதியவர்: mohan September 6, 2021, 5:14 am

சென்னையிலிருந்து விமானம் மூலம் மதுரை வந்த தமிழக தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார் அப்போது கூறியதாவது:-பொங்கல் விழா சென்னையில் நடைபெறுவது போல் மற்ற மாவட்டங்களுக்கு நடை பெறுவதற்கு வழிவகை செய்யப்படுமா என்ற கேள்விக்குபொங்கல் விழா சென்னையில் 6 இடங்களில் நடத்த உள்ளோம், இணையதளங்கள் வழியாகவும் நடத்தவுள்ளதாக இருக்கிறோம் எனக் கூறினார்.சூழ்நிலைகளைப் பொறுத்து மற்ற மாவட்டங்களில் பொங்கல் விழா நடத்துவது குறித்து முதல்வரிடம் ஆலோசனை செய்து நடத்துவதற்கு வழிவகை செய்வோம் என்றார்.கீழடியில் அகழாய்வு முடிக்கப்பட உள்ள நிலையில் அடுத்த கட்ட கலந்தாய்வு நடத்துவது குறித்த கேள்விக்கு.அடுத்த கட்டமாக அகழாய்வு நடத்துவதற்கு சில இடங்களை தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளோம் விருதுநகர் மாவட்டத்தில் வெம்பக்கோட்டை, திருநெல்வேலி மாவட்டத்தில் துளுக்கற்பட்டி, தர்மபுரி மாவட்டத்தில் பெரும்பாலை உள்ளிட்ட இடங்களில் அகல் ஆய்வு செய்வதற்காக தேர்வு செய்யப்பட்டு உள்ளோம் என்றார்.அதைத்தவிர தாமிரபரணி ஆற்றின் வழியிலே இருக்கக் கூடிய இடங்களில் முதல் கட்டமாக களஆய்வுகளை மேற்கொள்ள இந்த ஆண்டு அறிவிப்புகளை செய்திருக்கிறோம் என்றார்.தொடர்ந்து இந்தியாவிலேயே ஐந்து கோடி ரூபாய்க்கு அகழாய்வை பாதுகாப்பதற்காக தமிழக முதலமைச்சர் வழங்கியுள்ளதாக கூறினார்.தமிழ் மொழியின் தொன்மையை நிறுவுவதற்கும், அறிவுப்பூர்வமான சான்றுகளை தருவதற்கு தமிழக அரசு நிச்சயமாக உருவாக்கும்.கீழடி அருங்காட்சியம் அமைப்பதற்கான செயல்பாடு குறித்த கேள்விக்குகீழடியின் அருங்காட்சியம் பணிகள் 12 கோடி செலவில், 34 ஆயிரம் சதுரடியில் கீழடி அருங்காட்சியகம் அமைக்கப்பட்டு வருகிறது என்றார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!