17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வாலிபர் கொலை .

மதுரை மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் வாலிபர் கொலை .

எழுதியவர்: mohan September 4, 2021, 10:39 pm

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகா ஆப்பனூர் கிராமத்தை சேர்ந்தவர் கலைஞர்நதி.இவருடைய மகன் மகேஸ்வரன் வயது 24, இவர் மதுரை கீழவாசல் பகுதியில் உள்ள பாத்திரக் கடையில் பணிபுரிந்து வருகிறார்.இவர் மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஒன்றியத்துக்குட்பட்ட மேல அனுப்பானடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் தனது நண்பர் மாரீஸ்வரன் என்பவருடன் குடியிருந்து வருகிறார்.இந்நிலையில் இவர் தான் தங்கியிருந்த வீட்டில்வந்த மர்ம கும்பல் இரண்டு பேரையும் சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டது.அதை தொடர்ந்து காலையில் வெகு நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் அக்கம் பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மகேஸ்வரன் என்பவர் வெட்டு காயத்துடன் பிணமாக கிடந்தார் மேலும் மாரீஸ்வரன் என்பவர் படுகாயத்துடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.இவர்களைக் கண்டதும் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவரை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.தகவல் அறிந்து விரைந்து வந்த கீரைத்துரை காவல் துறையினர் மற்றும் தடயவியல் நிபுணர்கள்பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து கொலைக்கான காரணம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!