17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வெறி நாய்களை விரைந்து அப்புறப்படுத்த வேண்டும்; கடையநல்லூர் நகராட்சிக்கு எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை..

வெறி நாய்களை விரைந்து அப்புறப்படுத்த வேண்டும்; கடையநல்லூர் நகராட்சிக்கு எஸ்டிபிஐ கட்சி கோரிக்கை..

எழுதியவர்: mohan September 3, 2021, 9:57 am

கடையநல்லூர் பகுதியில் பொதுமக்களை அச்சுறுத்தும் வெறிநாய்களை விரைந்து அப்புறப்படுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென எஸ்டிபிஐ கட்சி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் கடையநல்லூர் ரஹ்மானியபுரம் மேற்கு பகுதியில் வெறி நாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது. இந்நிலையில், 02.09.21 வியாழக்கிழமை மதியம் 3 மணியளவில் 7 வயது சிறுவனை வெறிநாய்களின் கூட்டம் திடீரென கடித்து காட்டு பகுதிக்கு இழுந்து சென்றுள்ளது. அங்கிருந்த மாடு மேய்க்கும் நபர் அந்த வெறி நாய்களின் கூட்டத்தை விரட்டியடித்து சிறுவனை காப்பாற்றினார். பின்பு கடையநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு மேல் சிகிச்சைக்கு தென்காசி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. வெறிநாய்களின் தொல்லையால் மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். எனவே பொது மக்கள் நலன் கருதி வெறி நாய்களை அப்புறபடுத்த வேண்டும் என நகராட்சி நிர்வாகத்தை SDPI கட்சி ரஹ்மானியபுரம் கிளை வலியுறுத்தியுள்ளது. மேலும் பலமுறை எஸ்டிபிஐ சார்பில் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. இந்நிலை தொடரும் பட்சத்தில் விரைவில் வெறி நாய்களை அப்புறப்படுத்த கோரி எஸ்டிபிஐ கட்சி சார்பில் நகராட்சியை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என கடையநல்லூர் எஸ்டிபிஐ ரஹ்மானியபுரம் கிளை அறிவித்துள்ளது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!