17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தென்காசி காவல்துறை சார்பில் இளைஞர்கள் பொதுமக்களிடையே விழிப்புணர்வு..

தென்காசி காவல்துறை சார்பில் இளைஞர்கள் பொதுமக்களிடையே விழிப்புணர்வு..

எழுதியவர்: mohan September 3, 2021, 9:45 am

குற்றச் செயல்கள் குறித்து தென்காசி காவல் ஆய்வாளர் இளைஞர்களிடேயே விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தென்காசி மாவட்டம், தென்காசி காவல் எல்லைக்குட்பட்ட வாய்க்கால் பாலம் பகுதியில் காவல் ஆய்வாளர் பாலமுருகன் அப்பகுதியிலுள்ள இளைஞர்களிடம் காவல்துறை உங்கள் நண்பன் எனவும், உங்கள் நண்பனுக்கு உதவும் விதமாக குற்றங்கள் நடைபெறாமல் தடுப்பதற்கு இளைஞர்கள் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும், உங்கள் பகுதியில் யாரேனும் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டாலோ அல்லது சந்தேகம் பாடும்படி யாரேனும் சுற்றி திரிந்தாலும் தயங்காமல் காவல் துறையினரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும், இளைஞர்களுக்கும் காவல்துறைக்கும் இடையே நல்லுணர்வை ஏற்படுத்தும் விதமாக விழிப்புணர்வை ஏற்படுத்தினார். மேலும் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS உத்தரவின் பேரில் மாவட்டம் முழுவதும் பொதுமக்களுக்கு கொரோனா குறித்து தென்காசி மாவட்ட காவல்துறையினர் தொடர் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.இதே போல் செங்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சார்பு ஆய்வாளர் கோபால் தலைமையிலான காவல்துறையினர் கொரோனா மற்றும் முகக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்தி

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!