18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » போக்குவரத்துக்கு இடையூறாக நோ பார்க்கிங்கில் நிறுத்தினால் கடும் நடவடிக்கை-காவல்துறை எச்சரிக்கை

போக்குவரத்துக்கு இடையூறாக நோ பார்க்கிங்கில் நிறுத்தினால் கடும் நடவடிக்கை-காவல்துறை எச்சரிக்கை

எழுதியவர்: mohan September 2, 2021, 5:35 am

வேலூர் மாநகரில் போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நோ பார்க்கிங்கில் 3 முறை நிறுத்தினால் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வக்குமார் உத்தரவுப்படி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் ஆலோசனைப்படி வேலூர் போக்கு காவல் ஆய்வாளர் சீனிவாசன்,வேலூர் புதிய பேருந்து நிலைய கிரீன் சர்க்கிள், பழைய பேருந்துநிலையம், அண்ணாசாலை பகுதிகளில் 2 முறை போக்குவரத்தி விதிமீறி நோ பார்க்கிங்கிள் வாகனங்களை நிறுத்திய 50 பேர் வரவழைக்கப்பட்டனர்.இவர்களுக்கு போக்குவரத்து காவல்நிலைய வளாகத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.இதில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சீனிவாசன், வேலூர் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கருணாநிதி, சக்திவேல் ஆகியோர் வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்கினர்.3-வது முறை வாகனங்களை நோ பார்க்கிங்கில் மீண்டும் நிறுத்தினால் ஓட்டுநர் உரிமம் செய்யப்படும் என்று எச்சரித்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!