17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சங்கரன்கோவில் காவல்துறை சார்பில் துண்டு பிரசுரங்கள் வழங்கி கொரோனா விழிப்புணர்வு.

சங்கரன்கோவில் காவல்துறை சார்பில் துண்டு பிரசுரங்கள் வழங்கி கொரோனா விழிப்புணர்வு.

எழுதியவர்: mohan August 31, 2021, 11:33 am

சங்கரன்கோவில் நகர காவல் துறையினர் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS உத்தரவுபடி மாவட்டம் முழுவதும் காவல் துறையினர் அனைத்து ஊர்களிலும் பொதுமக்களிடம் கொரோனா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இதேபோல் சங்கரன்கோவில் நகர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் ராஜா தலைமையிலான காவல்துறையினர் பேருந்து நிலையத்தில் இருந்த பொதுமக்களிடம் கொரோனா குறித்து விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்கள் வழங்கி,நம் நாட்டில் தற்போது கொரோனா தொற்று மீண்டும் பரவ துவங்கியுள்ளதால் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொண்டு தங்களின் குடும்பத்தினரையும் தடுப்பூசி போட்டுக் கொள்ள அறிவுறுத்த வேண்டும் எனவும்,வெளியே பொது இடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் அப்போது தான் கொரோனா வைரசில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்ற விழிப்புணர்வையும் ஏற்படுத்தினர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!