17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » குற்றாலம் காவல்துறை சார்பில் முகக்கவசம் வழங்கி கொரோனா விழிப்புணர்வு..

குற்றாலம் காவல்துறை சார்பில் முகக்கவசம் வழங்கி கொரோனா விழிப்புணர்வு..

எழுதியவர்: mohan August 28, 2021, 3:40 pm

குற்றாலம் காவல் துறையினர் பொது மக்களுக்கு முகக் கவசம் வழங்கி கொரோனா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS உத்தரவுபடி மாவட்டம் முழுவதும் காவல் துறையினர் அனைத்து ஊர்களிலும் பொதுமக்களிடம் கொரோனா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இதே போல் குற்றாலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கொட்டாகுளத்தில் சார்பு ஆய்வாளர் சண்முகவேல் தலைமையிலான காவல் துறையினர் அப்பகுதியிலுள்ள பொதுமக்கள் அனைவருக்கும் முகக்கவசம் வழங்கினர்.பின்னர் நம் நாட்டில் மீண்டும் கொரோனா தொற்று பரவ துவங்கியுள்ளதால் அனைவரும் வெளியே செல்லும் போது முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் எனவும், கைகளை கிருமிநாசினி கொண்டு அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும் எனவும், கொரோனா தடுப்பூசியை கட்டாயம் செலுத்திக் கொள்ள வேண்டும் என்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!