17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தென்காசி சாலை அரசு மருத்துவமனை அருகில் லாரி, இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் உடல் நசுங்கி பால் வியாபாரி பலி.

தென்காசி சாலை அரசு மருத்துவமனை அருகில் லாரி, இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் உடல் நசுங்கி பால் வியாபாரி பலி.

எழுதியவர்: mohan August 27, 2021, 6:54 am

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தென்காசி தேசிய நெடுஞ்சாலை அரசு மருத்துவமனை அருகில் தேனியிலிருந்து தென்காசி நோக்கி சரக்கு ஏற்றி வந்த லாரி எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் சோழசேரி பகுதியை சேர்ந்த பால் வியாபாரி அந்தோணி (வயது 38) என்பவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.இந்த விபத்து குறித்து தகவலறிந்த வந்த தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்தில் உயிரிழந்த அந்தோணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தினை ஏற்படுத்திய லாரி டிரைவர் ராமசாமி என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!