17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சோழவந்தானில் 360 கிலோ குட்கா பறிமுதல் 4 பேர் கைது.

சோழவந்தானில் 360 கிலோ குட்கா பறிமுதல் 4 பேர் கைது.

எழுதியவர்: mohan August 25, 2021, 5:24 am

மதுரை மாவட்டம்சோழவந்தான் பகுதியில் சட்டவிரோதமாக குட்கா புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் உத்தரவின்பேரில்,சமயநல்லூர் துணை கண்காணிப்பாளர் பாலசுந்தரம் ஆலோசனையின் பேரில்,சோழவந்தான் இன்ஸ்பெக்டர் சிவபாலன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் உள்பட போலீசார் சோழவந்தான் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.திருவேடகம் முனியாண்டி கோவில் பகுதியில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்வதற்காக வைத்திருந்த முள்ளிப்பள்ளம் கிராமத்தைச் சேர்ந்த அருண்குமார் 37,எஸ்.மேட்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த காசிநாதன் 30,பிள்ளையார்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த சுரேஷ் 33,சோழவந்தான் வட்ட பிள்ளையார் கோவில் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் 41 ஆகியோரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து சுமார் 2 லட்சம் மதிப்புள்ள 360 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டத. மேலும் வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!