17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை ஆதீனத்தில் 293- வது மடாதிபதி பதவியேற்பு.

மதுரை ஆதீனத்தில் 293- வது மடாதிபதி பதவியேற்பு.

எழுதியவர்: mohan August 24, 2021, 6:35 am

மதுரை ஆதீனத்தில் 293- வது மடாதிபதி பதவியேற்பு:மதுரை :மதுரை ஆதீனத்தில், 293-வது மடாதிபதியாக ஞானசம்பந்த தேசிய பரமாச்சாரிய சுவாமிகள் திங்கள்கிழமை பொறுப்பேற்றார்.மதுரை ஆதின மடத்தில் மறைந்த ஆதினகர்த்தர் அருணகிரிநாதரின் 500 கிலோ எடையுள்ள பளிங்கு சிலை பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.உடல்நலக்குறைவு காரணமாக, கடந்த சில நாட்களுக்கு முன், காலமான மதுரை ஆதீனத்தின் 292வது பீடாதிபதியான ஸ்ரீலஸ்ரீ அருணகிரிநாத ஞானசம்பந்த தேசிக பரமாச்சார்ய சுவாமிகளின் உடல் மதுரை முனிச்சாலை பகுதியில் உள்ள ஆதினத்திற்கு சொந்தமாக இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.இந்த நிலையில்பொதுமக்கள் ஏராளமானோர் மறைந்த மதுரை ஆதினத்திற்கு அஞ்சலி செலுத்தினர்.தற்போது, மறைந்த ஆதினத்தின் பளிங்கு சிலை மக்களின் அஞ்சலிக்காக மடத்தில் வைக்கப்பட்டது.இதனை, ஏராளமான பொது மக்களும், பக்தர்களும் பார்த்து சென்றனர். இந் நிலையில்,மதுரை புதிய ஆதீனமாக,மதுரை ஆதினத்தில் 293-வது மடாதிபதியான ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த, தேசிய பரமாச்சாரிய சுவாமிகள், திங்கள்கிழமை பொறுப்பேற்றார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!