17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தென்காசி மாவட்ட எஸ்.பி தலைமையில் நல்லிணக்க நாள் உறுதி மொழியேற்பு..

தென்காசி மாவட்ட எஸ்.பி தலைமையில் நல்லிணக்க நாள் உறுதி மொழியேற்பு..

எழுதியவர்: mohan August 20, 2021, 5:02 am

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் நல்லிணக்க நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் ஐபிஎஸ் தலைமையின் கீழ் மாவட்ட காவல் அலுவலகத்தில் பணிபுரியும் காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் நல்லிணக்க நாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நான் சாதி,இன, வட்டார,மத அல்லது மொழிப் பாகுபாடு எதுவுமின்றி இந்தியாவின் அனைத்து மக்களின் உணர்வு பூர்வ ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்திற்கும் பாடுபடுவேன் என்று உளமார உறுதி மொழி எடுத்துக் கொள்கிறேன். மேலும் எங்களுக்கு இடையேயான அனைத்து வேறுபாடுகளையும் வன்முறையில் ஈடுபடாமல்,பேச்சு வார்த்தைகள் மூலமாகவும் அரசியலமைப்பு சட்டம் வழிமுறைகளை பின்பற்றி தீர்த்துக் கொள்வேன் என்றும் இதனால் உறுதியளிக்கிறேன் என்ற வாசகங்கள் மூலம் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!