17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரையில் தடைசெய்யப்பட்ட பான் மசாலா, குட்கா 940 கிலோ பறிமுதல் 3பேர் கைது.

மதுரையில் தடைசெய்யப்பட்ட பான் மசாலா, குட்கா 940 கிலோ பறிமுதல் 3பேர் கைது.

எழுதியவர்: mohan August 18, 2021, 6:43 am

மதுரையில் தனியார் கொரியர் சேவை மூலமாக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான்பராக், பான்பராக், குட்கா உள்ளிட்ட பொருட்களை கடத்தி வந்ததாக மதுரை எஸ் எஸ் காலனி காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.இதனை தொடர்ந்து இது குறித்து விசாரணை நடத்திய எஸ்.எஸ்.காலனி போலீசார் கொரியரில் வந்த முகவரியை ஆய்வு செய்ததில் நெல்லை மாவட்டதிலிருந்து கொரியர் மூலம் கடத்துவது தெரியவந்தது.இதனை தொடர்ந்து நெல்லை சென்ற காவல்துறை கூடங்குளத்தை சேர்ந்த கண்ணன், திசையன்விளையை சேர்ந்த பாண்டியராஜன், வாழகுரு மற்றும்ஆகிய 3 பேரை கைது செய்து மதுரையை சேர்ந்த தலைமறைவானரோஷன் போலீசார் தேடி வருகின்றனர் மேலும் அவர்கள் வாகனங்களில் பதுக்கி வைத்திருந்த சுமார் 940 கிலோ பான்பராக், குட்கா உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.மேலும் இதுபோன்று கொரியர் மூலம் தடை செய்யப்பட்ட பொருட்கள் கடத்தும் சம்பவத்தில் கும்பலாக செயல்படுகிறார்களா என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!