18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கொரோனா 3ஆம் அலையை எதிர்கொள்ள தயாராகவுள்ளோம். மாவட்ட ஆட்சியர் பேட்டி.

கொரோனா 3ஆம் அலையை எதிர்கொள்ள தயாராகவுள்ளோம். மாவட்ட ஆட்சியர் பேட்டி.

எழுதியவர்: mohan August 17, 2021, 7:16 am

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் அனிஸ்சேகர் பேசியபோது :மதுரை மாவட்டத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை எனவும் 3ஆம் அலை கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறோம், 3ஆம் அலையை எதிர்கொள்ள தயாராக உள்ளோம் எனவும், கொரோனா கண்காணிப்பு மையங்கள் தொடர்ந்து செயல்பட்டுவருகிறது.3ஆம் அலையை எதிர்கொள்ள 150ஐசியூ படுக்கைகள் மற்றும் குழந்தைகளுக்கான பிரிவில் 30ஐசியூவுடன் கூடிய படுக்கைகள் தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.மதுரை மாவட்டத்தில் 4ஆக்சிஜன் உற்பத்தி மையங்களில் இரண்டு மையங்களில் பணிகள் முடிவுற்றுள்ளது. மதுரை மாவட்டத்தில் நாளொன்றுக்கு 8டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது எனவும் , 80 மருத்துவர்கள், 150 செவிலியர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் நியமனம் செய்யப்பட்டு கொரோனா 3ஆம் அலையை எதிர்கொள்ள தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!