17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கம்மாபட்டி பகுதியில் அடிப்படை வசதிகள் செய்துதரக்கோரி பொதுமக்கள் 300க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டம்

கம்மாபட்டி பகுதியில் அடிப்படை வசதிகள் செய்துதரக்கோரி பொதுமக்கள் 300க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டம்

எழுதியவர்: mohan August 17, 2021, 7:11 am

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தெற்கு வெங்காநல்லூர் பகுதிக்குட்பட்ட கம்மாபட்டி பகுதியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர் இந்த பகுதியில் மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தால் பல்வேறு அரசு அலுவலகங்களில் மனு கொடுத்து விட்டோம் எங்கள் பகுதியை அரசு நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை அதனால் அப்பகுதி மக்கள் 300-க்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களை ராஜபாளையம் வட்டாட்சியர் ராமச்சந்திரன் மற்றும் ராஜபாளையம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உங்கள் பகுதியில் உள்ள அடிப்படை வசதிகள் மற்றும் குடிநீர் வசதிகள் செய்து தருவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்த பின் அப்பகுதி மக்கள் கலைந்து சென்றனர் இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

.செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!