17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை மஹ்தூமியா தொடக்கப்பள்ளி, மற்றும் மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தின நிகழ்ச்சி…

கீழக்கரை மஹ்தூமியா தொடக்கப்பள்ளி, மற்றும் மேல்நிலைப்பள்ளியில் சுதந்திர தின நிகழ்ச்சி…

எழுதியவர்: ஆசிரியர் August 15, 2021, 6:10 pm

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை மஹ்தூமியா தொடக்கப்பள்ளியில் மாவட்ட அரசு காஜி சலாவுதீன் தேசியக் கொடி ஏற்றி சுதந்திரத்திற்காக நம் முன்னோர்கள் போராடியதை பற்றி பேசினார்.

பின்பு மஹ்தூமியா மேல் நிலைப்பள்ளியில் கீழக்கரை வட்டாட்சியர் முருகேசன் தேசிய கொடியினை ஏற்றி சுதந்திரத்தின் பெருமையை பற்றி உரையாற்றினார். தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் முகம்மது ரிஸ்வானா மேல் நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கிருஷ்ணவேணி அனைவரையும் வரவேற்றனர். அதன் தொடர்ச்சியாக மஹ்தூமியா தொடக்க பள்ளி தாளாளர் மீரா சாகிபு மற்றும் மேல் நிலைப்பள்ளியின் தாளாளர் இப்திஹார் ஹசன், சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியின் போது பழைய குத்பா பள்ளி ஜமா அத் தலைவர் செய்யது அபுதாஹிர் மற்றும் ஜமா அத் பொருளாளர் ஹாஜா ஜலாலுதீன், ஜமா அத் உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். கொரான தடுப்பு பணியில் ஈடுபட்ட மருத்துவர்கள், முன்கள பணியாளர்கள் ஆகியோர்களுக்கு பொன்னாடை அணிவித்து பதக்கங்கள் வழங்கப்ட்டு சிறப்பிக்கப்பட்டது.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!