18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » கீழக்கரை செய்திகள் » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கீழக்கரை நகர் காங்கிரஸ் கமிட்டி சார்பாக சுதந்திர தின விழா உற்சாக கொண்டாட்டம்…

கீழக்கரை நகர் காங்கிரஸ் கமிட்டி சார்பாக சுதந்திர தின விழா உற்சாக கொண்டாட்டம்…

எழுதியவர்: ஆசிரியர் August 15, 2021, 3:47 pm

கீழக்கரை நகர் காங்கிரஸ் கமிட்டி சார்பாக 75 வது இந்திய சுதந்திர தின தேசிய கொடி ஏற்றும் விழா கீழக்கரை முஸ்லீம் பஜார் சந்திப்பில் சிறப்பாக நடைபெற்றது.

கீழக்கரை முன்னாள் நகர் காங்கிரஸ் தலைவரும், தில்லையேந்தல் ஊராட்சி தலைவரும், மாவட்ட பொது செயலாளருமான கே.ஆர்.டி கிருஷ்ணமூர்த்திஅவர்கள் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட துனைத் தலைவர் சித்திக் ஹுசைன் முன்னிலை வகித்தார், மேலும் சிறப்பு அழைப்பாளராக இராமநாதபுரம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஹசன்அலி அவர்கள் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்.

கீழக்கரை நகர் காங்கிரஸ் தலைவர் எஸ்.  அஜ்மல் கான் வரவேற்புரை ஆற்றிய இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் மூத்ததலைவர ஜின்னா சாகிப் அவர்கள் இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்து உரை நிகழ்த்தினார்.

இந்த் சிறப்பான விழாவில் மாவட்ட துணைதலைவர் எம்.கே.எஸ். முருகானந்தம், அமீரக காங்கிரஸ் செயலாளர் ஹாஜா ஷாம், மாவட்ட பொதுசெயலாளர் ஜீ.சந்திர சேகரன் காங்கிரஸ் நிர்வாகி சீனிசேகு, இளைஞர் காங்கிரஸ் நகர்தலைவர் சித்திக் மரைக்கார், நகர் மகளிர் அணி தலைவி ஆர். சடேஸ்வரி, மற்றும் மூத்த காங்கிரஸ் நிர்வாகி கே.வி கணேசன் , நகர் நிர்வாகிகள் எம்.எஸ். முகம்மது கனி, முகமது இஸ்மாயில் , மேஸ்திரி சந்திர சேகரன், மைக்கேல், சாகுல் ஹமீது, செய்யது முகம்மது, குமார், பாபு உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இந்த் விழாவில் கீழக்கரை நகர் காங்கிரஸ் கமிட்டி துணை தலைவர் எஸ். கணேச மூர்த்தி நன்றியுரை ஆற்றினார் நிகழ்ச்சி முடிவில் அனைவருக்கும் சுவையான இனிப்பும் தேனீரும் வழங்கப்பட்டது.

தகவல் : எஸ். அஜ்மல்கான் கீழக்கரை நகர் காங்கிரஸ் தலைவர்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!