18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சமயநல்லூர் அருகே பைக் மீது கார் மோதியதில் இளைஞர் பலி .

சமயநல்லூர் அருகே பைக் மீது கார் மோதியதில் இளைஞர் பலி .

எழுதியவர்: mohan August 13, 2021, 6:59 am

மதுரைமாவட்டம் சமயநல்லூர் அருகே பைக் மீது கார் மோதியதில் வாலிபர் பரிதாப பலியானார்.மதுரை ஆரப்பாளையத்தை சேர்ந்த ராஜா மகன் கோபி (20). இவரும் இவரது நண்பர் பிரதீப் (23) . இருவரும் சோழவந்தான் சென்றுவிட்டு மீண்டும் மதுரைக்கு திரும்பியுள்ளனர் . சோழவந்தானில் இருந்து நான்கு வழி சாலையில் இணையும் இடத்தில் இவர்கள் கடந்த பொழுது சமயநல்லூர் பகுதியில் இருந்து வந்த கார் இவர்கள் ஓட்டிச்சென்ற டூவீலர் மீது மோதியது . இதில் சம்பவ இடத்திலேயே கோபி பரிதாபமாக பலியானார். படுகாயமடைந்த பிரதீப் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து சமயநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!