17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஸ்ரீவில்லிபுத்தூரில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக போக்சோ சட்டத்தில் பாதிரியார் ஒருவரை கைது செய்து காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக போக்சோ சட்டத்தில் பாதிரியார் ஒருவரை கைது செய்து காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.

எழுதியவர்: mohan August 13, 2021, 6:32 am

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ரைட்டன்பட்டி பகுதியில் உள்ள 11 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்ததாக சிவகாசி ரிசர்வ்லைன் பகுதியில் செயல்பட்டு வரும் பெந்தகோஷ் சபையில் பாதிரியாராக உள்ள கிறிஸ்துதாஸ் வயது (43) என்பவர் போக்சோ சட்டத்தில் கைது செய்து விசாரணை செய்ததில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு குடும்ப பிரச்சனை காரணமாக சிறுமியின் தாய் அவரது சகோதரிகள் மூன்று பேர் பாதிரியாரின் வீட்டில் தஞ்சம் அடைந்ததாக கூறப்படுகிறது. பாதரியார் வீடு வீடாக சென்று ஜெபம் நடத்தி வருபவர். இந்நிலையில் பாதிரியார் வீட்டில் தஞ்சம் அடைந்த குடும்பத்தினர் இருந்து வந்த நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரங்களில் அடிக்கடி தனியாக இருந்த சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமி அவரது தாயிடம் பாதிரியார் கிறிஸ்துதாஸ் தன்னிடம் தவறாக நடந்து கொள்வதாக தெரிவித்துள்ளார்.இந்நிலையில் சிறுமியின் தாய் அளித்த புகாரின் அடிப்படையில் பாதிரியார் மீது ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பாதிரியாரை கைது செய்தனர். பின்னர் அவரை மாவட்ட ஒருங்கினைந்த நீதிமன்றத்தில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் ஆஜார் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!