18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தென்காசி தலைமை மருத்துவமனையில் எண்டோஸ்கோபி சிகிச்சை;மருத்துவ கண்காணிப்பாளர் ஜெஸ்லின் துவக்கி வைத்தார்..

தென்காசி தலைமை மருத்துவமனையில் எண்டோஸ்கோபி சிகிச்சை;மருத்துவ கண்காணிப்பாளர் ஜெஸ்லின் துவக்கி வைத்தார்..

எழுதியவர்: mohan August 12, 2021, 9:47 am

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் எண்டோஸ்கோபி கருவி மூலம் சிகிச்சையளிக்கும் புதிய வசதி துவங்கப்பட்டுள்ளது. மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் துவக்கி வைத்தார். தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் காது மூக்கு தொண்டை புறநோயாளிகள் பிரிவில், புதிதாக எண்டோஸ் கோபி கருவியை 11.08.21 புதன் கிழமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.ஜெஸ்லின் தொடங்கி வைத்தார். இந்த கருவி மூலம் காது மூக்கு மற்றும் தொண்டையில் ஏற்படும் புற்று நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது. சில தனியார் மருத்துவ மனைகளில் மட்டுமே உள்ள இந்த வசதி தற்போது தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த எண்டாஸ்கோப்பி கருவியைப் பற்றி காது-மூக்கு-தொண்டை சிறப்பு மருத்துவர் மணிமாலா கூறும் போது, தற்போது இக்கருவி அரசு மருத்துவக் கல்லூரிகளில் மட்டுமே உள்ளது. மாவட்ட தலைமை மருத்துவமனைகளில் முதன் முதலாக தென்காசி மாவட்ட தலைமை மருத்துவமனையில் தான் வாங்கப்பட்டுள்ளது என்றார். மேலும் இக்கருவி வாங்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்த மருத்துவமனை கண்காணிப்பாளர் மற்றும் இணை இயக்குனர் நலப்பணிகள் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் உறைவிட மருத்துவர் அகத்தியன்,காது மூக்கு தொண்டை மருத்துவர் மணிமாலா,மருத்துவர் மல்லிகா,பல் மருத்துவர் லதா மற்றும் செவிலியர்கள், மருத்துவமனை பணியாளர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!