17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » தமுமுக தலைவர் ஜவாஹிருல்லா கீழக்கரை வருகை- நிருபர்கள் சந்திப்பு..

தமுமுக தலைவர் ஜவாஹிருல்லா கீழக்கரை வருகை- நிருபர்கள் சந்திப்பு..

எழுதியவர்: ஆசிரியர் December 30, 2017, 9:22 pm

தமுமுக தலைவர் ஜவாஹிருல்லா இன்று (30/12/2017) கீழக்கரைக்கு பல்வேறு பணிகளுக்காக வருகை தந்திருந்தார். பின்னர் கீழக்கரையில் உள்ள புதிய தமுமுக அலுவலகத்தை திறந்து வைத்து கீழக்கரை பகுதிகளில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளையும் சந்தித்து ஆலோசனைகளும் வழங்கினார்.

பின்னர் இந்நிகழ்வின் ஒரு பகுதியாக மேற்பட்டப்படிப்பு படித்த இளைஞர் ஒருவருக்கு நிதி உதவியும் வழங்கினார். அதைத் தொடர்ந்து அலுவலகத்திற்கு வருகை தந்திருந்த பத்திரிக்கை நிருபர்களையும், அவர்கள் எழுப்பிய வினாக்களுக்கும் மிகவும் தெளிவாக பதில் அளித்தார்.

பத்திரிக்கை சந்திப்பில் முக்கியமாக மத்திய அரசு அவசர கதியில் தலாக் என்பதின் ஆழமும், அவசியமும் என்ன என்பதே அறியாமல் மக்களவையில் கொண்டு வந்திருக்கும் முத்தலாக் தடை சட்டம் மற்றும் அதன் தண்டனைகளை அனைவரும் ஒருமித்த கருத்துடன் எதிர்க்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!