17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து. ஒருவர் காயம்..

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து. ஒருவர் காயம்..

எழுதியவர்: mohan August 12, 2021, 6:17 am

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள பந்துவார்பட்டி பகுதியில், பட்டாசு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் தொழிலாளி ஒருவர் காயமடைந்தார்.அச்சங்குளத்தைச் சேர்ந்த சகாதேவன் (50) என்பவருக்குச் சொந்தமான, மாவட்ட வருவாய் அலுவலர் உரிமம் பெற்ற பட்டாசு ஆலை, பந்துவார்பட்டியில் செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் உள்ள 5 பட்டாசு தயாரிக்கும் அறைகளில், 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பட்டாசு தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பட்டாசுகளுக்கு மருந்து செலுத்தும் அறையில், மூலப்பொருட்கள் உராய்வு ஏற்பட்டு, அங்கிருந்த பட்டாசுகளில் தீப்பிடித்து எரியத் துவங்கியது. அந்த அறையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த, நடுச்சூரங்குடி பகுதியைச் சேர்ந்த ஆரோக்கியராஜ் என்பவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. உடனடியாக அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு, சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து தகவலறிந்து சாத்தூர் தீயணைப்பு நிலைய அதிகாரி கதிரேசன் தலைமையில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்தி அணைத்தனர். விபத்து குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!