17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இராஜபாளையத்தில் மில் தொழிலாளி வீட்டில் பட்டப்பகலில் 12 பவுன் நகை திருட்டு மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர் உதவியுடன் போலீசார் விசாரணை .

இராஜபாளையத்தில் மில் தொழிலாளி வீட்டில் பட்டப்பகலில் 12 பவுன் நகை திருட்டு மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர் உதவியுடன் போலீசார் விசாரணை .

எழுதியவர்: mohan August 12, 2021, 6:13 am

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் ஆண்டாள்புரம் பகுதியைச் சேர்ந்தவர் சசிகுமார் (வயது 45 )இவரது மனைவி சாந்தி .சசிகுமார் தனியார் நூற்பாலையில் பணியாற்றி வருகிறார் இவரது மனைவி சாந்தி தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார் .இவர்கள் ஆண்டாள் புரத்தில் விஜயராஜ் என்பவரது மகன் ஆனந்தகுமார் வீட்டின் மாடியில் வாடகைக்கு குடியிருந்து வருகின்றனர் .இவர்கள் இருவரும் இன்று காலை வழக்கம் போல் வேலைக்கு சென்ற நிலையில் மதியம் 2 மணி அளவில் உணவு அருந்துவதற்காக வீட்டுக்கு வந்து பார்த்த பொழுது வீட்டின் பின்புற கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 12 பவுண் நகை கீழ் வீட்டில் ஐந்து ரூபாய் பணம் என திருடு போனது தெரிய வந்துள்ளது உடனடியாக இராஜபாளையம் தெற்கு காவல் நிலைத்தில் புகார் அளிக்கப்பட்டது புகாரின் பேரில் விருதுநகரில் இருந்து கைரேகை நிபுணர் மற்றும் மோப்ப நாய் ராக்கி உதவியுடன் தெற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் முக்கிய சாலையில் அமைந்துள்ள வீட்டில் திருடு போனது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் வி காளமேகம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!